search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    டெல்லி, கர்நாடகா, உத்தரகாண்ட், ஆந்திர மாநில கொரோனா அப்டேட்ஸ்

    கர்நாடகாவில் இன்று 14,738 பேருக்கும் ஆந்திராவில் 5,086 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    கர்நாடக மாநிலத்தில் இன்று புதிதாக 14,738 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3591 பேர் டிஸ்சார்ஜ் ஆக 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஒட்டுமொத்தமாக 11,09,650 பேர் பாதிப்படைந்துள்ளனர். இதில் 9,99,958 பேர் குணமடைந்துள்ளனர். 13,112 பேர் உயிரிழந்துள்ளனர். 96,561 பேர் இதுவரை சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள்.

    உத்தரகாண்ட் மாநில்தில் இன்று புதிதாக 2220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,16,244 பாதிக்கப்பட்டுள்ளனர். ஹரித்துவாரில் இன்று புதிதாக 613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 19,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோப்புப்படம்

    ஆந்திராவில் 5,086 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1745 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 9,42,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,03,072 பேர் குணமடைந்த நிலையில், 7353 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 31,710 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    டெல்லியில் 16,699 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் உயிரழந்துள்ளனர். 13014 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×