search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய தேர்தல் ஆணையம்
    X
    இந்திய தேர்தல் ஆணையம்

    மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்?

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்த வாய்ப்புள்ளது என்ற செய்தி உலாவருகிறது.
    மேற்கு வங்காளத்தில் 294 சட்டசபை தொதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. தற்போது வரை நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. நாளைமறுதினம் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

    கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் பொதுக்கூட்டம் மற்றும் மம்தா  பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடுகிறார்கள். அவர்கள் எந்தவிதமான கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளையும் கடைபிடிப்பதில்லை. இதனால் கொரோனா தடுப்பு அதிரிக்க வாய்ப்புள்ளது.

    ஒவ்வொரு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வரும் நிலையில், மேற்கு வங்காளத்தில் மீதமுள்ள தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இணைத்து தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்ற யூகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

    இந்த நிலையில் மீதமுள்ள நான்கு கட்டங்களை ஒரே கட்டமாக இணைத்து நடத்தும் திட்டம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும், மேற்குவங்காள மாநில தலைமை தேர்தல் ஆணையம், மத்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையான வகையில் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
    Next Story
    ×