search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆக்சிஜன்
    X
    ஆக்சிஜன்

    கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம்

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளுக்கு அதிகமான நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் படுக்கைகளுக்கும், ஆக்சிஜனுக்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றிரண்டு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையம் மகாராஷ்டிராவில் உள்ளது. இந்த நிறுவனம் குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து மகாராஷ்டிராவிற்கு எந்தவித கட்டணமின்றி ஆக்சிஜன் வழங்கியுள்ளது. இதை அங்குள்ள அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    ரிலையன்ஸ்

    ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 100 டன் ஆக்சிஜனை மகாராஷ்டிரா மாநிலம் பெற இருக்கிறது என்று அம்மாநில அமை்சசர் ஏக்நாத் சிண்டே தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×