search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சத்தீஸ்கர் சுகாதார இணை இயக்குனர் கொரோனாவுக்கு பலி

    கொரோனா தடுப்பு மருந்து 2-வது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு எதிர்ப்பு சக்தி 4 அல்லது 6 வாரங்களில் உருவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் சுகாதார சேவைகள் இணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் சுபாஷ் பாண்டே. 64 வயதான இவர் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். பின்னர் குணமடைந்ததை அடுத்து பணிக்குச் சென்றார். கடந்த மாதம் கடைசி வாரத்தில் சுபாஷ் பாண்டே கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை செலுத்திக் கொண்டார்.

    இந்த நிலையில் அவர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் மற்றும் லேசான இருமல் இருந்தது. இதையடுத்து அவர் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே அவரது உடல்நிலை மோசமடைந்தது. நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து டாக்டர்கள் கூறும் போது கொரோனா தடுப்பு மருந்து 2-வது டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு எதிர்ப்பு சக்தி 4 அல்லது 6 வாரங்களில் உருவாகும்.

    நோய் தடுப்பு சக்தியால் மீண்டும் தொற்று ஏற்படாது என்பதற்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால் கடுமையான தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்றனர்.
    Next Story
    ×