search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    காங்கிரஸ் கட்சி யூடியூப் சேனலை தொடங்கியது

    முக்கிய தொலைக்காட்சிகளில் புறக்கணிக்கப்படும் காங்கிரஸ் பற்றிய செய்திகளும், நிகழ்ச்சிகளும் காங்கிரஸ் யூடியூப் சேனலில் முழுமையாக ஒளிபரப்பாகும்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சிக்கென்று தனி சேவை தொடங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இந்த நிலையில் ‘ஐ.என்.சி.’ டிவி எனப்படும் புதிய யூடியூப் சேனலை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் முன் முயற்சியான பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி வருகிற 24-ந்தேதி முதல் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். தற்போது இந்த சேனல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே ஒளிபரப்பாகும். 8 மணி நேரம் இதில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

    இந்த சேனலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்களின் பேட்டிகள், கருத்துக்கள் ஒளிபரப்பாகும். காங்கிரஸ் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகும்.

    மேலும் முக்கிய தொலைக்காட்சிகளில் புறக்கணிக்கப்படும் காங்கிரஸ் பற்றிய செய்திகளும், நிகழ்ச்சிகளும் இந்த யூடியூப் சேனலில் முழுமையாக ஒளிபரப்பாகும்.

    மகாத்மா காந்தி

    தொடக்க விழாவின்போது இந்த யூடியூப் சேனலில் முதல் நிகழ்ச்சியாக சுதந்திர போராட்டத்தில் பத்திரிகையாளராக மகாத்மா காந்தி ஆற்றிய பணிகள் குறித்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பத்திரிகைகளில் காந்தி எழுதிய கட்டுரை தொகுப்புகள் காண்பிக்கப்பட்டன.

    புதிய யூடியூப் சேனல் தொடங்கப்பட்டது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறுகையில், ‘பல்வேறு வகையான கருத்துக்கள் இந்த சேனலில் ஒளிபரப்பாகும். இந்த யூடியூப் சேனல் படிப்படியாக பிராந்திய மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்’ என்றார்.
     

    Next Story
    ×