search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது - மம்தா பானர்ஜி

    8 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகும் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் வெறும் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள சட்டசபை தேர்தலையொட்டி, ஜல்பைகுரியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    மேற்கு வங்காளத்தில் 4 கட்டமாக 135 தொகுதிகளில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா ஏற்கனவே 100 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டதாக பிரதமர் மோடி கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. 8 கட்ட தேர்தல்கள் முடிந்த பிறகும் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் வெறும் 70 தொகுதிகளில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது.

    பா.ஜனதா


    தேர்தல் பிரசாரத்துக்காக வெளியாட்களை பா.ஜனதா கொண்டு வந்ததால்தான், இங்கு கொரோனா பரவல் அதிகரித்து விட்டது.

    டார்ஜிலிங்கில் பேசிய அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு வராது என்று கூறியுள்ளார். ஆனால், ஏற்கனவே தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி, சட்டவிரோதமாக குடியேறியதாக 14 லட்சம்பேர் கண்டறியப்பட்டு, தடுப்புக்காவல் முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×