search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் (கோப்பு படம்)
    X
    மாணவிகள் (கோப்பு படம்)

    தேர்வு ரத்து... உள் மதிப்பீடு அடிப்படையில் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்

    12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புத் தோவுகள் மே 4-ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்த  நிலையில், டெல்லியில் மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

    அதன்பின்னர் மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா 2-வது அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றும், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால்

    மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது:-

    மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. உள்மதிப்பீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும். உள் மதிப்பீடு அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் திருப்தி அளிக்கவில்லை எனில் அந்த மாணவர்கள், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பிய பின்னர் தேர்வு எழுதலாம். இதற்காக சிறப்பு தேர்வு நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை பல்வேறு தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதேபோல் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
    Next Story
    ×