search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பீகாரில் அதிர்ச்சி சம்பவம்... அட்மிசனுக்காக காத்திருந்த கொரோனா நோயாளி மரணம்

    கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பீகார் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 4000ஐ கடந்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 20000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பாட்னாவில் உள்ள நாலந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (என்எம்சிஎச்) சேர்ப்பதற்காக நேற்று ஒரு கொரோனா நோயாளியை அவரது உறவினர்கள் கொண்டு வந்தனர். அட்மிசனுக்காக காத்திருந்தபோது, அந்த நோயாளி திடீரென இறந்துவிட்டார். 

    கொரோனா பாதிப்பினால் இறந்தவரின் மகன்

    அவரது மகன் கூறுகையில், ‘என் தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதும் பிற மருத்துவமனைகளில் அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். நாலந்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அட்மிசன் போடுவதாக கூறினார்கள். ஆனால் மிகவும் தாமதம் ஆனது. எங்களை சுமார் ஒன்றரை மணி நேரமாக காத்திருக்க வைத்தனர்.’ என்றார்.

    இதுபோன்ற சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார். சில நாட்களில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகிறது, கூடுதல் வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
    Next Story
    ×