search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    நாங்கள் பெங்காலை குஜராத் ஆக விடமாட்டோம்: 24 மணி நேர தடை முடிந்த பிறகு மம்தா பானர்ஜி பிரசாரம்

    தேர்தல் கமிஷன் தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, இரவு 8 மணிக்குப் பிறகு பிரசாரம் செய்தார்.
    மேற்கு வங்காள முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜி, ஒரு குறிப்பிட்ட மதத்தினர் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு  வாக்களிக்காதீர்கள் என்று பிரசாரம் செய்யும்போது கூறியதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனால் நேற்று இரவு 8 மணியில் இருந்து இன்று இரவு 8 மணி வரை எந்தவிதமான தேர்தல் பிரசாரமும் செய்யக்கூடாது என மம்தா பானர்ஜிக்கு தடைவிதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து இன்று தர்ணா போராட்டத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். இரவு 8 மணியான பிறகு பராசட் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில் ‘‘ மேற்கு வங்காளத்தை குஜராத்து ஆக அனுமதிக்கமாட்டோம். பெங்கால் குஜராத்தாக முடியாது.

    பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள்

    நான் ஒரு தெருப்போராளி. போர்க்களத்தில் உங்களை எதிர்த்து போரிடுவேன். பாஜனதாவிற்கு நான் சொல்ல விரும்புவது, உங்களிடம் பணம் உள்ளது. ஓட்டல்கள் உள்ளன. அனைத்து ஏஜென்சிகளும் உள்ளன. இருந்தாலும் நீங்கள் இந்த போரில் தோற்பீர்கள். ஏனென்றால் நான் ஒரு தெருப்போராளி’’ என்றார்.
    Next Story
    ×