search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி தேவஸ்தானம்
    X
    திருப்பதி தேவஸ்தானம்

    ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து 21-ந்தேதி ஆதாரம் வெளியிடப்படும்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்

    ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்கள் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதனை 21-ந் தேதி மாற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    திருமலை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள சேஷாசல மலைத்தொடரில் அஞ்சனாத்திரி மலை உள்ளது. இந்த அஞ்சனாத்திரி மலை ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக பல புராணம் மற்றும் இதிகாசங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் இது சம்மந்தமாக ஆய்வு செய்ய 6 பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்தது. அவர்கள் பல புராணங்களை ஆராய்ந்து தகவல்களை சேகரித்துள்ளனர்.

    அதன்படி ஆஞ்சநேயர் அஞ்சனாத்திரி மலையில் பிறந்ததற்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர்

    இதுகுறித்த தகவல்களை இன்று தெலுங்கு வருட பிறப்பான உகாதியன்று பக்தர்களுக்கு ஆதாரத்துடன் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தேவஸ்தானம் சார்பில் வருகிற 21-ந் தேதி ராமநவமி அன்று ஆஞ்சநேயர் பிறப்பு குறித்த ஆதாரங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    Next Story
    ×