search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்

    இதய அறுவை சிகிச்சைக்கு பின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
    புதுடெல்லி:

    75 வயதாகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    அதைத் தொடர்ந்து டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியிலும், பின்னர் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அவர் அனுமதிக்கப்பட்டார்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடந்த மார்ச் 30-ந் தேதி எய்ம்சில் இதய ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 3-ந் தேதி ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சிறப்பு அறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அவரது உடல்நலம் மேம்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரை நன்கு ஓய்வு எடுக்குமாறு கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘இதய அறுவை சிகிச்சை முடிந்து நான் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பியுள்ளேன். அனைவரின் வாழ்த்துகள் மற்றும் பிராத்தனையாலும், ராணுவ, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகளின் சிறப்பான கவனிப்பாலும் நான் விரைவாக குணமடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி. மீண்டும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×