search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    காளஹஸ்தி கோவிலில் அர்ச்சகர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா

    கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை நிர்வாகம் மேற்கொண்டது. அதில் வங்கி கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேர், அர்ச்சகர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஆந்திராவில் கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. காளஹஸ்தி சிவன் கோவிலில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கோவிலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையை நிர்வாகம் மேற்கொண்டது. அதில் வங்கி கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் 3 பேர், அர்ச்சகர்கள் 2 பேர் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா ஏற்பட்ட ஊழியரின் குடும்பத்தினருக்கும் பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதியானது.

    ஊழியர் ஒருவரின் மனைவி கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்தார்.

    இதனால் அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்யவும், தடுப்பூசி போடவும் உடனடியாக உத்தரவிடப்பட்டது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும். ஆதார் அட்டையை தங்களுடன் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். கையுறை, சானிடைசர் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும்.

    ராகு-கேது பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கட்டாயம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் பூஜையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

    Next Story
    ×