search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கையில் புனித நீராடிய மக்கள்
    X
    கங்கையில் புனித நீராடிய மக்கள்

    ஹரித்வாரில் கும்பமேளா... சமூக இடைவெளியை மறந்து கங்கையில் புனித நீராடிய மக்கள்

    ஹரித்வார் கங்கை நதிக்கரையில் இன்று புனித நீராடுவதற்காக அதிக அளவில்மக்கள் கூடியதால் அவர்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை.
    ஹரித்வார்:

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம் தேதி முதல் கும்ப மேளா திருவிழா நடைபெற்று வருகிறது. கும்பமேளா 30-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு முக்கிய நாட்கள் என அறிவிக்கப்பட்டது. 

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கும்ப மேளாவில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும், அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில், புனித நீராடலுக்கு உகந்த தினமான இன்று கங்கை நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். இதையொட்டி நதிக்கரையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

    அதிகாலையிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டது. விதிமுறைகளை பின்பற்றும்படி அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர். ஆனால், பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்றே நதியில் நீராடினர். அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

    கும்பமேளா ஐஜி சஞ்சய் கஞ்ச்யால்

    இதுபற்றி கும்பமேளா ஐஜி சஞ்சய் கஞ்ச்யால் கூறுகையில், ‘அதிக அளவில் மக்கள் கூடியதால் ஒழுங்குபடுத்த முடியவில்லை. கட்டாயப்படுத்தி சமூக இடைவெளியை பின்பற்றச் செய்தால், கூட்ட நெரிசல் போன்ற சிக்கலான சூழ்நிலை ஏற்படலாம்’ என்றார். 

    நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும், பொது நிகழ்வுகளில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
    Next Story
    ×