search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 35 லட்சம் தடுப்பூசி டோஸ் போடப்பட்டன - சுகாதார அமைச்சகம் தகவல்

    நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவீத டோஸ்கள் வெறும் 9 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் தினசரி போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்து விட்டது. அந்தவகையில் தடுப்பூசி திட்டத்தின் 85-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 35 லட்சத்து 19 ஆயிரத்து 987 டோஸ்கள் போடப்பட்டு உள்ளன.

    இதில் 31,22,109 பயனாளர்கள் முதல் டோசும், 3,97,878 பயனாளர்கள் 2-வது டோசும் பெற்றுள்ளனர். வெறும் 24 மணி நேரத்தில் இவ்வளவு அதிக தடுப்பூசி போடப்பட்டிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி போடப்பட்டு வருவதால் நாட்டின் மொத்த டோஸ் எண்ணிக்கை நேற்று காலையில் 10.15 கோடியாக இருந்தது. 10 கோடி தடுப்பூசி டோஸ்களை வேகமாக எட்டிய நாடுகளில் இந்தியா முதலிடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களில் 60.27 சதவீத டோஸ்கள் வெறும் 9 மாநிலங்களில் போடப்பட்டு உள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
    Next Story
    ×