search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மராட்டியத்தில் இப்படியும் ஒரு கொடூரம் - திருமணமான 2 பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை

    மராட்டியத்தில் திருமணமான 2 பெண்களுக்கு கன்னித்தன்மை சோதனை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    புனே:

    மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் கஞ்சர்பட் என்ற சமூகத்தை சேர்ந்த 2 பெண்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி அண்ணன்- தம்பியான சகோதரர்களை திருமணம் செய்தனர்.

    திருமணத்திற்கு பிறகு மாமியார், தனது மருமகள்களிடம் கன்னித்தன்மை சோதனை செய்து உள்ளார். இந்த வழக்கம் அவர்களின் சமூகத்தின் நடைமுறையாக கருதப்படுகிறது. இந்த சோதனையில் அவர்கள் தோல்வி அடைந்ததாக மாமியார் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்களின் கணவர்மார்கள் அவர்களை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கிவரும்படி கணவர் வீட்டினர் அவர்களை கட்டாயப்படுத்தி உள்ளனர்.

    இதற்கு அந்த பெண்கள் மறுத்ததை அடுத்து சாதி பஞ்சாயத்தின் உதவியுடன் அந்த பெண்களுக்கு விவாகரத்து நோட்டீஸ் வழங்கினர். இதனால் பாதிக்கப்பட்ட 2 பெண்களும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் கணவர்கள் மற்றும் மாமியார், சாதி பஞ்சாயத்து பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×