search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    உலகிலேயே மிகவும் வேகமாக 10 கோடி தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை

    இந்தியாவில் இதுவரை 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது,

    முதலில் முன்களப் பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில், தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து 85-வது நாளான நேற்று 10 கோடி டோஸை கடந்துள்ளது. குறைந்த நாட்களில் 10 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை எட்டிய முதல் நாடு இந்தியா என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×