search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் ஒரே நாளில் 34 லட்சம் பேருக்கு தடுப்பூசி

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிற சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிற சூழலில் தடுப்பூசி போட்டுக்கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 84-வது நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 34 லட்சத்து 15 ஆயிரத்து 55 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 30 லட்சத்து 6 ஆயிரத்து 37 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 4 லட்சத்து 9 ஆயிரத்து 18 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

    உலகளவில் கொரோனா தடுப்பூசி போடுவதில் சராசரி எண்ணிக்கையில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒரு நாள் சராசரி 38 லட்சத்து 93 ஆயிரத்து 288 ஆகும்.

    நாட்டில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை இந்தியாவில் 9 கோடியே 80 லட்சத்து 75 ஆயிரத்து 160 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

    89 லட்சத்து 88 ஆயிரத்து 373 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 54 லட்சத்து 79 ஆயிரத்து 821 சுகாதார பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளனர்.

    முன்கள பணியாளர்களில் 98 லட்சத்து 67 ஆயிரத்து 330 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 46 லட்சத்து 59 ஆயிரத்து 35 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    60 வயதுக்கு மேற்பட்டோரில் 3 கோடியே 86 லட்சத்து 53 ஆயிரத்து 105 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 15 லட்சத்து 90 ஆயிரத்து 388 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். 45-60 வயதுக்குட்பட்டோரில் 2 கோடியே 82 லட்சத்து 55 ஆயிரத்து 44 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 5 லட்சத்து 82 ஆயிரத்து 64 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர்.

    இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளில் 60.62 சதவீதம் மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம், மத்திய பிரதேசம், கேரளா ஆகிய 8 மாநிலங்களை சேர்நதவர்களுக்கு போடப்பட்டுள்ளது.

    மத்திய சுகாதார அமைச்சகம் இந்த புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×