search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோந்து பணியில் போலீசார்
    X
    ரோந்து பணியில் போலீசார்

    பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவுநேர ஊரடங்கு அமலுக்கு வந்தது

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது.

    குறிப்பாக தலைநகர் பெங்களூரு நகர், மைசூரு, கலபுரகி, பீதர், உடுப்பி உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் பெங்களூரு நகர், மைசூரு, மங்களூரு, உடுப்பி, மணிப்பால், பீதர், கலபுரகி, துமகூரு ஆகிய 8 நகரங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் இரவு நேர கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்திருந்தது.

    தினமும் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரை கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு கூறியுள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 20-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு கூறியுள்ளது.

    இந்நிலையில், பெங்களூரு, மைசூரு உள்பட 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது.

    மருத்துவ சேவைகள் வழங்கும் மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகளை வழங்கும் அமைப்புகளை தவிர பிற அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன.

    அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வினியோகம் செய்யும் வாகனங்கள், மின்னணு வணிகம் மற்றும் அது தொடர்பான காலி வாகனங்கள் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

    வணிக வளாகங்கள், மதுக்கடைகள், பல சரக்கு கடைகள், காய்கறி கடைகள், உணவகங்கள் அனைத்து வகையான வணிக ரீதியிலான கடைகளும் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்.

    ஊரடங்கு சட்ட விதிகளை மீறுபவர்கள் மீது இயற்கை பேரிடர் நிர்வாக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு (2020) அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நடைமுறை கர்நாடகத்தில் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×