search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு
    X
    மத்திய அரசு

    41 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு- மத்திய அரசு முடிவு

    2020-ம் ஆண்டு புதிய தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என்று கொள்கை வகுக்கப்பட்டு இருந்தது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் பல பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்தி மாணவர் சேர்க்கைகளை நடத்துகிறது.

    2020-ம் ஆண்டு புதிய தேசிய கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதில் அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் சேர்த்து ஒரே நுழைவுத் தேர்வை நடத்துவது என்று கொள்கை வகுக்கப்பட்டு இருந்தது.

    இது சம்பந்தமாக ஆய்வு நடத்துவதற்கு 7 பேர் கொண்ட குழுவை பல்கலைக் கழக மானிய குழு அமைத்தது. அவர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் அனைத்து பல்கலைக்கழ கங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தும் படி சிபாரிசு செய்துள்ளனர்.

    மேலும் எந்தெந்த முறையில் தேர்வு இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளன. இதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் 41 மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

    இளங்கலை, முதுகலை, பி.எச்.டி. ஆய்வு பட்டப்படிப்புகள் அனைத்துக்கும் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். 100 கேள்விகள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். இதில் 50 கேள்விகள் ஆப்டிடியூட் முறையிலும், 50 கேள்விகள் வேறு முறைகளிலும் இருக்கும்.

    இந்த ஆண்டு நுழைவுத் தேர்வை நடத்த உள்ளனர். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி அடிப்படையில் தேர்வு நடைபெறும். ஆண்டுக்கு 2 முறை தேர்வுகள் நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு முதன்முதல் அறிமுகம் என்பதால் ஒரே முறை மட்டுமே நுழைவுத் தேர்வு மட்டுமே நடத்தப்பட இருக்கிறது.

    ஏப்ரல் மாத இறுதியில் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படும். ஜூன் மாதம் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு ஜூலை மாதம் முடிவுகள் அறிவிக்கப்படும்.

    Next Story
    ×