search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேகமாக தடுப்பூசி போடும் பணிகளில் இந்தியா முதலிடம்

    இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகளும் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.

    அந்தவகையில் நாள்தோறும் போடப்படும் தடுப்பூசி டோஸ்களின் சராசரி எண்ணிக்கை 30,93,861 ஆக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் வேகமாக தடுப்பூசி போட்டு வரும் நாடுகளில் அமெரிக்காவையும் பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

    இந்தியாவில் நேற்று காலை 7 மணி நிலவரப்படி 8.70 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டு விட்டன. சுகாதார பணியாளர்கள், முன்கள வீரர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் என படிப்படியாக தடுப்பூசி பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கிய 81-வது நாளான நேற்று முன்தினம் மட்டும் 33,37,601 டோஸ்கள் போடப்பட்டன. இதில் 30,08,087 பேருக்கு முதல் டோசும், 3,29,514 பேருக்கு 2-வது டோசும் போடப்பட்டு உள்ளன.
    Next Story
    ×