search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மராட்டிய நீர் பாதுகாப்பு துறை மந்திரி சங்கர்ராவ் கதக்
    X
    மராட்டிய நீர் பாதுகாப்பு துறை மந்திரி சங்கர்ராவ் கதக்

    மராட்டிய மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி

    மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஒருநாள் பாதிப்பு நேற்று முன்தினம் 57 ஆயிரத்தை தாண்டியது.
    புனே:

    மராட்டியத்தில் கொரோனா 2-வது அலை அசுர வேகத்தில் பரவி வருகிறது. ஒருநாள் பாதிப்பு நேற்று முன்தினம் 57 ஆயிரத்தை தாண்டியது. நோய் தொற்றின் கோரப்பிடியில் இருந்து மந்திரிகள், சினிமா பிரபலங்கள் என யாராலும் தப்ப முடியவில்லை.

    இந்தநிலையில் மராட்டிய நீர் பாதுகாப்பு துறை மந்திரி சங்கர்ராவ் கதக்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், "மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. டாக்டர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்கள் உடல்நலத்தை கவனித்து கொள்ள வேண்டும். மேலும் தங்களுக்கும் நோய் தொற்று பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மந்திரி சங்கரராவ் கதக் அகமதுநகரில் உள்ள நெவசா தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் சிவசேனாவில் இணைந்து மந்திரியானது குறிப்பிடத்தக்கது. மராட்டியத்தில் இதுவரை துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்பட சுமார் 20 மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×