search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒரே கட்சிக்கு பெரும்பான்மை - வலைதளங்களில் வைரலாகும் கருத்து கணிப்பு முடிவு

    மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    மேற்கு வங்க மாநிலத்திற்கான முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் 84 சதவீதம் வாக்குகள் பதிவாகின. முதற்கட்ட தேர்தல் நிறைவுற்றதை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என கூறி ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகின்றன.

    வைரல் பதிவுகளின் படி 30 தொகுதிகளுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 26 தொகுதிகளை கைப்பற்றும், பாஜக 1 முதல் 3 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சம் ஒரு தொகுதியில் வெற்றி பெறும் என கூறப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    சமூக வலைதளங்களில் வலம் வரும் ஸ்கிரீன்ஷாட்களை ஆய்வு செய்ததில், அது விஷமிகளால் மாற்றப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட தனியார் செய்தி நிறுவனமும் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் எடிட் செய்யப்பட்டது என தெரிவித்து இருக்கிறது.

    தேர்தல் ஆணைய விதிமுறைகளின் படி சட்டமன்ற தேர்தல் முழுமையாக முடிவதற்குள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட அனுமதி கிடையாது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என கூறி வெளியான கருத்து கணிப்பு உண்மையானது இல்லை என உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×