search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டது

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியில் நாளுக்கு நாள் வேகம் பிடிக்கிறது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணியில் நாளுக்கு நாள் வேகம் பிடிக்கிறது.

    நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் (3 கோடியே 33 லட்சத்து 10 ஆயிரத்து 437 தடுப்பூசிகள்) மராட்டியம், குஜராத், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளன.

    மராட்டிய மாநிலத்தில் இதுவரையில் 73 லட்சத்து 54 ஆயிரத்து 244 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மொத்த தடுப்பூசிகளில் 9.68 சதவீதம் ஆகும்.

    அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 69 லட்சத்து 23 ஆயிரத்து 8 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    உத்தரபிரதேசத்தில் 66 லட்சத்து 43 ஆயிரத்து 96 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 64 லட்சத்து 31 ஆயிரத்து 601 தடுப்பூசிகளும், மேற்கு வங்காளத்தில் 59 லட்சத்து 58 ஆயிரத்து 488 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன.
    Next Story
    ×