search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பிரசாரம்
    X
    மம்தா பிரசாரம்

    3-வது கட்ட தேர்தல்- மேற்கு வங்காளம், அசாமில் இன்று பிரசாரம் ஓய்கிறது

    அசாமில் 3-வது மற்றும் கடைசி கட்டமாக 40 தொகுதிகளுக்கு 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

    கொல்கத்தா:

    தமிழ்நாட்டுடன் சேர்ந்து மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இரு மாநிலங்களிலும் 2 கட்ட தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன. கடந்த மாதம் 27-ந் தேதி முதல் கட்ட தேர்தலும், கடந்த 1-ந் தேதி 2-வது கட்ட தேர்தலும் நடந்தன.

    அசாமில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 126. அதில் முதல் 2 கட்ட தேர்தல்களில் 86 தொகுதிகளில் தேர்தல் முடிந்தது. 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கு வருகிற 6-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அத்துடன் அசாமில் தேர்தல் முடிவுக்கு வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 294. இதில் ஏற்கனவே நடந்த 2 கட்ட தேர்தலில் 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது.

    6-ந் தேதி 3-வது கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும். இவை தவிர இன்னும் 5 கட்ட தேர்தல்கள் மீதம் உள்ளன. அங்கு 29-ந் தேதி வரை தொடர்ந்து தேர்தல் நடைபெற உள்ளது.

    இரு மாநிலங்களிலும் 3-வது கட்ட தேர்தல் நடைபெறும் 71 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. அதன்பிறகு தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×