search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிஎஸ்டி வருவாய்
    X
    ஜிஎஸ்டி வருவாய்

    ஜிஎஸ்டி வசூலில் சாதனை - மார்ச் மாத வசூல் ரூ.1.24 லட்சம் கோடியாக உயர்வு

    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அறிவிக்கப்பட்டது முதல் 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் வசூலாகியிருப்பதே அதிகபட்ச தொகையாகும்.
    புதுடெல்லி:

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி வருவாய் வெகுவாக குறைந்தது. தளர்வுகள் அறிவித்தபின் ஜிஎஸ்டி வருவாய் அதிரிக்க தொடங்கியது.

    மத்திய நிதியமைச்சகம்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    கடந்த மாதம் (மார்ச் 1-ந்தேதியில் இருந்து மார்ச் 31-ம் தேதி வரை) மொத்த ஜிஎஸ்டி வருவாய் ஒரு லட்சத்தை தாண்டி 1,23,902 கோடி ரூபாய் வசூலானதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது.

    மத்திய ஜிஎஸ்டி 22,973 கோடி ரூபாய், மாநில ஜிஎஸ்டி 29,329 கோடி ரூபாய், ஐஜிஎஸ்டி 62,842 கோடி ரூபாய் மற்றும் செஸ் 8,757 கோடி ரூபாய் வருவாய் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது

    இது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். தொடர்ந்து ஐந்து மாதங்களாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்து வரும் நிலை மார்ச் மாதமும் நீடித்துள்ளது.
    Next Story
    ×