search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்லப்பட்ட தொண்டரின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சி
    X
    கொல்லப்பட்ட தொண்டரின் குடும்பத்தினர் கதறி அழும் காட்சி

    திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் குத்திக்கொலை- மேற்கு வங்காளத்தில் பதற்றம்

    பதற்றத்தை உருவாக்கி, வாக்குப்பதிவுக்கு முன்னதாக வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் பாஜக தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுவதால் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே இரு கட்சியினரிடையே ஒரு சில இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

    முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது முன்னாள் உதவியாளர் சுவேந்து அதிகாரி நேருக்கு நேர் மோதும் நந்திகிராம் தொகுதியில் பதற்றமான சூழல் இருப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பாஸ்சிம் மேதினிபூர் மாவட்டம் கேஷ்பூர் பகுதியில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை  உருவாக்கி உள்ளது. உத்தம் டோலுயி (வயது 48) என்ற அந்த தொண்டரை, 10-15 பேர் சுற்றி வளைத்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

    சம்பவம் நடந்த பகுதி

    பாஜகவைச் சேர்ந்த ரவுடிகள் இந்த கொலையை செய்ததாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. பதற்றத்தை உருவாக்கி, வாக்குப்பதிவுக்கு முன்னதாக வாக்காளர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த தாக்குதலை நடத்தியதாக உத்த டோலுயி குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதற்றம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×