search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    வழக்கு தொடர்ந்த நபர் தாக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ

    ஷியா வாரிய முன்னாள் தலைவர் தாக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி குர்ஆனில் உள்ள 26 வசனங்கள் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி நீக்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார். 

    இதைத் தொடர்ந்து  போலீசார் முன்னிலையில் மக்கள் ஒன்றுகூடி ஒருவரை கடுமையாக தாக்கும் பகீர் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் தாக்கப்படும் நபர் ரிஸ்வி என்றும், இவர் முஸ்லீம்களின் மத உணர்வை பாதித்ததால் தாக்கப்படுகிறார் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    இந்த சம்பவம் பஞ்சாபில் நடைபெற்றதாகவும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர்கள் வாசிம் ரிஸ்வியை தாக்கினர் எனும் தலைப்பில் வைரல் வீடியோ பகிரப்படுகிறது.

     வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், அதில் இருப்பது வாசிம் ரிஸ்வி இல்லை என தெரியவந்தது. உண்மையில் வைரல் வீடியோவில் தாக்கப்படும் நபர் பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அருன் நரங் ஆவார். இவரை விவாசியகள் சிலர் ஒன்று கூடி மார்ச் 27 ஆம் தேதி தாக்கினர்.    

    ரிஸ்வியின் மனு தாக்கல் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. மேலும் இவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனினும், இவர் மற்ற குழுவினரால் தாக்கப்பட்டார் என கூறும் தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் ரிஸ்வி தாக்கப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×