search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணி: விவசாய சங்கம் முடிவு

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
    மத்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து போராட்டம் தொடர்கிறது.

    கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். அப்போது வன்முறை ஏற்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில் மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என்று சும்யுக்த் கிஷன் மோர்சா தெரிவித்துள்ளது.

    கோப்புப்படம்

    நேற்று சம்யுக்த் கிஷன் மோர்சா கூட்டம் நடைபெற்றது. அப்போது மோ மாதம் முதல் இரண்டு வாரத்தில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. தேதி இன்றும் அறிவிக்கப்படவில்லை. இதில் விவசாயிகள் மட்டுமல்ல, பெண்கள், வேலைவாய்ப்பு இல்லை நபர்கள், ஊழியர்கள் இதற்கு ஆதரவு தெரிவிப்பாளர்கள் என அதன் தலைவர் குர்னாம் சிங் சதுனி தெரிவித்துள்ளார்.

    கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி நடந்த சம்பவம் மீண்டும் நடைபெறாத வண்ணம், அமைதியான முறையில் பேரணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் இதற்கென ஒரு குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×