search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா?- ப.சிதம்பரம் கேள்வி

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
    புதுடெல்லி:

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தற்காலிகமானதா? நிரந்தரமானதா? என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்-அமைச்சர் கூறுகிறார். அவருக்கு தென் மாவட்டங்களின் கவலை.

    இல்லையெனில், 10.5 சதவீதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு.

    முதல் -அமைச்சர் என்ன சொல்லப் போகிறார்? எல்லாவற்றுக்கும் மேலாக ‘ஒதுக்கீடு’ என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பா.ஜ.க. என்ன சொல்லப் போகிறது?

    இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×