search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி மம்தா பானர்ஜி
    X
    முதல் மந்திரி மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காளம், அசாமில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல்

    அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.
    கொல்கத்தா:

    தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளாவில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஆனால் அசாமில் 3 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் இரு மாநிலங்களிலும் முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ம் தேதி முடிந்துவிட்டது. அசாமில் 47 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்நிலையில், மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்துள்ளது. அசாமில் 39 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளிலும் இரண்டாவது கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 

     பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி

    இந்த 69 தொகுதிகளிலும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இன்று பூத் சிலிப்புகள் வீடு வீடாக கொடுக்கப்படும். நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. இரு மாநிலங்களிலும் 3-வது கட்ட தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. 
    Next Story
    ×