search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    ராகுல்காந்தி திருமணம் ஆகாத குறும்புக்காரர் - கேரள முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு

    ராகுல்காந்தி ‘திருமணம் ஆகாத குறும்புக்காரர்’. அவரிடம் கல்லூரி மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முன்னாள் எம்.பி. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    இடுக்கி:

    ராகுல்காந்தி ‘திருமணம் ஆகாத குறும்புக்காரர்’. அவரிடம் கல்லூரி மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேரள முன்னாள் எம்.பி. கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கேரள சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி, தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த வாரம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் பிரசாரத்துக்காக கேரளாவுக்கு வந்தார்.

    கொச்சியில் உள்ள புனித தெரசா மகளிர் கல்லூரி மாணவிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று மாணவிகளுடன் உரையாடினார்.

    இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி, முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், சர்ச்சைக்குரிய வகையில் ராகுல்காந்தியை விமர்சித்துள்ளார். இவர், கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இடுக்கி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை எம்.பி. ஆவார்.

    இடுக்கியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜாய்ஸ் ஜார்ஜ் பேசியதாவது:-

    ஜாய்ஸ் ஜார்ஜ்


    ராகுல்காந்தி, பெண்கள் கல்லூரிக்கு மட்டுமே போகிறார். அவரிடம் மாணவிகள் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். அவர் முன்பாக மாணவிகள் குனியக்கூடாது. அவர் ஒரு ‘திருமணம் ஆகாத குறும்புக்காரர்’.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாலியல் ரீதியான இக்கருத்து துரதிருஷ்டவசமானது என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறினார். ஜாய்ஸ் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

    இளைஞர் காங்கிரஸ் தலைவர் டீன் குரியகோஸ் கூறியதாவது:-

    தனது சொந்த மனநிலையைத்தான் ஜார்ஜ் பேசி இருப்பார் என்று கருதுகிறேன். அவருக்குள் இருந்த வக்கிரம் வெளியே வந்து விட்டது.

    அவர் ராகுல்காந்தியை மட்டுமின்றி, மாணவிகளையும் அவமதித்து விட்டார். அவருக்கு எதிராக தேர்தல் கமிஷனில் புகார் தெரிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ‘‘இது ஒட்டுமொத்த இடதுசாரி கூட்டணியின் கருத்தா?’’ என்று மாநில காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோசப் கேள்வி விடுத்துள்ளார்.

    சர்ச்சை எழுந்தநிலையில், ஜாய்ஸ் ஜார்ஜை ஆதரிக்க முதல்-மந்திரி பினராயி விஜயன் முன்வரவில்லை. ‘‘அரசியல்ரீதியாக ராகுல்காந்தியை விமர்சிப்பதுதான் இடதுசாரி கூட்டணியின் நிலைப்பாடு. தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டோம்’’ என்று பினராயி விஜயன் கூறினார்.

    தனது கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளாா்.
    Next Story
    ×