என் மலர்

  செய்திகள்

  டிகே சிவகுமார்
  X
  டிகே சிவகுமார்

  காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரின் பாதுகாப்பு கார் மீது செருப்பு வீச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி. விவகாரம் வெளியாகி கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  பெலகாவி:

  கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் ஆபாச சி.டி. விவகாரம் வெளியாகி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஆபாச சி.டி.யின் பின்னணியில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இருப்பதாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர். ஆனால் அந்த பெண், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தனக்கு ரமேஷ் ஜார்கிகோளி அநீதி இழைத்துள்ளார் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

  இதற்கிடையே ரமேஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்கள் டி.கே.சிவக்குமாரை கண்டித்து பெலகாவியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதேபோல் டி.கே.சிவக்குமார் குறித்து கீழ்த்தரமாக ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்த கருத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். இந்த சூழலுக்கு இடையே டி.கே.சிவக்குமார், நேற்று பெலகாவிக்கு விமானம் மூலம் சென்றார்.

  பெலகாவி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் பணிகளை கவனிக்க அவர் அங்கு சென்றார். அவர் விமானத்தில் இருந்து இறங்கி கார் மூலம் அந்த விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு அதிகளவில் கூடியிருந்த ரமேஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்கள், டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கோஷமிட்டு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

  அப்போது போராட்டக்காரர்களில் ஒருவர், செருப்பை கழற்றி டி.கே.சிவக்குமாரின் காரை பின்தொடர்ந்து சென்ற பாதுகாப்பு கார் மீது செருப்பு வீசினார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர். மேலும் டி.கே.சிவக்குமாருக்கு எதிராக கருப்பு துண்டையும் காட்டினர்.

  அதைத்தொடர்ந்து பெலகாவி நகருக்குள் நுழையும்போது டி.கே.சிவக்குமார் காரை தடுத்து நிறுத்திய ரமேஷ் ஜார்கிகோளியின் ஆதரவாளர்கள், அவரை மோசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இதனால் அங்கும் பரபரப்பு நிலவியது. போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பிறகு டி.கே.சிவக்குமார் ஒரு தனியார் ஓட்டலுக்கு சென்றார். முன்னதாக டி.கே.சிவக்குமார் காரை பின்தொடர்ந்து வந்த அவரது ஆதரவாளர் ஒருவரின் கார் கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்தனர்.

  அவர் இன்று (திங்கட்கிழமை) பெலகாவி மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ள சதீஸ் ஜார்கிகோளி வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். முன்னதாக நேற்று இரவு பெலகாவி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக டி.கே.சிவக்குமார் தங்கிய ஓட்டல் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  இதற்கிடையே, பெலகாவி மாவட்ட மகளிர் காங்கிரசார் ரமேஷ் ஜார்கிகோளியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். டி.கே.சிவக்குமார், ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோரது ஆதரவாளர்கள் மாறி, மாறி போராட்டம் நடத்தி வருவதால் கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
  Next Story
  ×