search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    ஊரடங்கு உத்தரவு போட தயார் நிலையில் இருங்கள்... அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவு

    தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரிப்பதால் கொரோனா தொடர்பான இறப்புகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மும்பை: 

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 35,726 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்கியது. தொற்று பரவலை தடுக்க இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஷாப்பிங் மால்கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்படவேண்டும்.

    தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாலும், பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதாலும் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டத்தை தயாரிக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

    உத்தவ் தாக்கரே, சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப், தலைமைச் செயலாளர் சீதாராம் குண்டே, கொரோனா தடுப்பு பணிக்குழுவின் மருத்துவர்கள் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகரித்து வரும் தொற்றுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் நோய்த்தடுப்பு பணிக்குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். தொடர்ந்து நோய்த்தொற்று அதிகரிப்பதால் கொரோனா தொடர்பான இறப்புகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு பற்றாக்குறையை மாநிலம் எதிர்கொள்ளக்கூடும் என்றும் முதல்வர் கூறினார். 

    அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில தலைமை செயலகத்திற்கு பொதுமக்கள் வருவதை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×