search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர் இந்தியா
    X
    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமான நிறுவனம் ஜூன் இறுதிக்குள் தனியார்மயம் - மத்திய மந்திரி தகவல்

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் நலிவடைந்ததால் அதனை தனியார்மயமாக்க கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம் நலிவடைந்ததால் அதனை தனியார்மயமாக்க கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு முடிவெடுத்தது. அதைத்தொடர்ந்து படிப்படியாக மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வருகிற ஜூன் மாத இறுதிக்குள் தனியார்மயமாக்கல் நடவடிக்கை முடிவடைய இருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    மத்திய விமான போக்குவரத்துத் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி


    செய்திநிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘ஏர் இந்தியா விமான நிறுவனம் ரூ.60 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. எனவே அதை விற்க வேண்டியதாகிவிட்டது. இதை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் ஜூன் இறுதிக்குள் முடிவடையும். இந்த மாதத்தின் இறுதியில் 100 சதவீத விமானங்களை இயக்க முடிவு செய்திருந்தோம். ஆனால் கொரோனா 2-வது அலையால் அது முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் தற்போது இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×