search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி இன்று வங்காளதேசம் செல்கிறார்

    கொரோனா பிரச்சினைக்கு பிறகு எனது முதலாவது வெளிநாட்டு பயணம், நம்முடன் நட்பில் உள்ள அண்டை நாடாக இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். 2 நாள் பயணமாக வங்காளதேசம் செல்கிறார்.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று வங்காளதேசத்துக்கு செல்கிறார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை.

    முதலாவது வெளிநாட்டு பயணமாக வங்காளதேசம் செல்கிறார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பின்பேரில், 26 மற்றும் 27-ந்தேதிகளில் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்கிறேன். கொரோனா பிரச்சினைக்கு பிறகு எனது முதலாவது வெளிநாட்டு பயணம், நம்முடன் நட்பில் உள்ள அண்டை நாடாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    வங்காளதேசத்தின் தேசிய தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவுக்காக நான் செல்கிறேன்.

    அங்கு முஜிபூர் ரகுமானின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவேன். 51 சக்தி பீடங்களில் ஒன்றான ஜஷோரிஷ்வரி காளி கோவிலுக்கு சென்று காளியை வழிபடுவேன். ஒரகண்டி என்ற இடத்தில் மடுவா சமூக பிரதிநிதிகளை சந்தித்து பேசுவேன்.

    ஷேக் ஹசீனாவுடன் பேச்சுவார்த்தை

    பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் கடந்த டிசம்பர் மாதம் காணொலி காட்சி மூலம் உரையாடினேன். தற்போது, அவரை நேரில் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருக்கிறேன். அதிபர் அப்துல் ஹமீதுவையும் சந்திப்பேன்.

    ஷேக் ஹசீனாவின் தலைமையில் வங்காளதேசம் அடைந்த பொருளாதார வளர்ச்சியை பாராட்டுவதுடன், இந்த சாதனைகளுக்கு இந்தியாவின் ஆதரவையும் தெரிவிப்பேன். மேலும், கொரோனாவுக்கு எதிரான அந்நாட்டின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவை தெரிவிப்பேன்.

    இவ்வாறு மோடி கூறியுள்ளார்.

    இந்த பயணத்தின்போது, இந்தியா-வங்காளதேசம் இடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும், புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×