search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை
    X
    மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை

    மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை

    கொரோனா தொற்று பரவல் காரணமாக வருகிற 28-ந்தேதி மற்றும் 29-ந்தேதி மும்பையில் நடைபெறும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மும்பை :

    மும்பையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வருகிற 28 மற்றும் 29-ந் தேதிகளில் நாடெங்கும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் வெட்டவெளியில் ஒன்று கூடி ஹோலிகா அரக்கி எரிப்பு மற்றும் அடுத்த நாள் ஒருவர் மீது ஒருவர் வண்ணம் பூசிக்கொண்டாடுவர். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்கள் ஒரே இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தொற்று பரவல் காரணமாக வருகிற 28-ந்தேதி மற்றும் 29-ந்தேதி மும்பையில் நடைபெறும் ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தனியார் மற்றும் பொது இடங்களில் எங்கும் ஹோலி கொண்டாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அனைத்து மாநகராட்சி அலுவலகத்திற்கும் சுற்றரிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இதனை மீறும் நபர்கள் மீது கொரோனா சட்டவிதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமல்லாமல் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் வரும் பயணிகளுக்கு அடிக்கடி கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    இதேபோல புனே மாவட்டத்திலும் ஹோலி கொண்டாட்டத்துக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது.
    Next Story
    ×