என் மலர்

  செய்திகள்

  லாட்டரி வியாபாரி ஸ்மிஜாவையும், பரிசு பெற்ற சந்திரன் மற்றும் அவரது மனைவியை படத்தில் காணலாம்.
  X
  லாட்டரி வியாபாரி ஸ்மிஜாவையும், பரிசு பெற்ற சந்திரன் மற்றும் அவரது மனைவியை படத்தில் காணலாம்.

  கேரளாவில் கடனாக வாங்கிய லாட்டரி சீட்டு மூலம் ரூ.6 கோடி பரிசு பெற்ற தொழிலாளி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தன்னிடம் கடனாக லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு முதல் பரிசு விழுந்ததும் அதை நேர்மையாக வாங்கியவரிடம் ஒப்படைத்த லாட்டரி வியாபாரியை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா சக்கரகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் அந்த பகுதியில் பூந்தொட்டி தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

  சந்திரன் அடிக்கடி லாட்டரி சீட்டுக்கள் வாங்குவது வழக்கம். அந்த பகுதியில் ஸ்மிஜா என்ற பெண் நடத்தி வரும் லாட்டரி கடையில் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்குவார்.

  இந்த நிலையில் லாட்டரி கடைக்காரர் ஸ்மிஜா தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸ்-அப் குரூப் ஒன்று வைத்துள்ளார்.

  நேற்று முன்தினம் கேரள அரசின் கோடை லாட்டரி குலுக்கல் நடந்தது. வழக்கமாக பிற்பகலில் தான் குலுக்கல் நடக்கும். ஆனால் அன்று ஸ்மிஜா லாட்டரி கடையில் டிக்கெட்டுகள் விற்காமல் இருந்தன. குலுக்கலுக்கு கொஞ்ச நேரமே இருந்த நிலையில் ஸ்மிஜா தனது வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து லாட்டரி சீட்டு வேண்டுமா? என கேட்டார். சந்திரனிடமும் கேட்டபோது,

  அவர் ஒரு லாட்டரி சீட்டை தனக்காக எடுத்து வைக்குமாறும் அதற்குரிய பணத்தை பின்னர் தருவதாகவும் கூறினார். அதன் படி ஸ்மிஜா ஒரு லாட்டரி சீட்டை எடுத்து அதன் எண்ணை போட்டோ எடுத்து அதனை வாட்ஸ் அப்பிலும் அனுப்பினார்.

  இந்த நிலையில் அந்த லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ. 6 கோடி பரிசு விழுந்தது. ஸ்மிஜா அந்த லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டு சந்திரன் வீட்டிற்குச் சென்று பரிசு விழுந்தது குறித்து தெரிவித்தார்.

  தன்னிடம் கடனாக லாட்டரி சீட்டு வாங்கியவருக்கு முதல் பரிசு விழுந்ததும் அதை நேர்மையாக வாங்கியவரிடம் ஒப்படைத்த லாட்டரி வியாபாரி ஸ்மிஜாவை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

  Next Story
  ×