search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகள் - மோடிக்கு, பூடான் பிரதமர் நன்றி

    முதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.
    புதுடெல்லி:

    சீரம் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான ‘கோவேக்சின்' ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளையும் இந்தியா அதன் நட்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது.

    அந்த வகையில் முதல் நாடாக பூடானுக்கு கடந்த ஜனவரி மாதம் 1.5 லட்சம் 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்கியது.

    இந்தநிலையில் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி வழங்கும் வகையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கும்படி பூடான் இந்தியாவை கேட்டுக்கொண்டது. அதன்படி 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானம் மூலம் பூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதனை பூடானுக்கான இந்திய தூதர் ருச்சிரா கம்போஜ் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி டாண்டி டோர்ஜியிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் கூடுதலாக 4 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் "கூடுதலாக 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பெறுவதில் மகிழ்ச்சி. இது எங்கள் தடுப்பூசித் திட்டத்தை நாடு தழுவிய அளவில் சாத்தியமாக்கும். பூடான் மக்களும், நானும் பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.‌
    Next Story
    ×