search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்
    X
    வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

    சமூக வலைதளங்களில் வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ

    ராகுல் காந்தி மாணவர்களிடையே உரையாடிய போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மாணவர் முரணான பதில் அளித்த காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. பாஜக ஆட்சியில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இருப்பது பற்றிய கேள்வியை ராகுல் காந்தி எழுப்பினார். 

    அப்போது ராகுல் காந்தி கேள்விக்கு பதில் அளித்த மாணவர், இல்லை என தெரிவிக்கிறார். வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், அது மார்ச் 19, 2021 அன்று அசாம் மாநிலத்தின் லஹோவல் பகுதியில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. வீடியோ ராகுல் காந்தி மாணவர்களிடையே நடத்திய நெடும் உரையாடலின் மிக சிறு பகுதி ஆகும். மேலும் இந்த வீடியோவில் பின்னணி இசை சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    அசாம் மாநிலத்தில் மார்ச் 27 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 6 வரை பலகட்டங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அசாம் மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ராகுல் காந்தி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

    மாணவர்களிடையே உரையாடும் போது உள்ளூர் மொழி தெரியாத காரணத்தால், ராகுல் காந்தி மொழி பெயர்ப்பாளர் உதவியுடன் பேசினார். அப்போது, ராகுல் காந்தி எழுப்பிய கேள்வியை மொழி பெயர்ப்பாளர் உள்ளூர் மொழியில் மாணவரிடம் விளக்கும் முன்பே மாணவர் `இல்லை, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கவில்லை' என தெரிவிக்கிறார்.

    அந்த வகையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ வேண்டுமென்றே சிறு தொகுப்பு மட்டும் எடுத்து ராகுல் காந்திக்கு எதிராக தோன்றும் வகையில் எடிட் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×