search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும்- ஆம் ஆத்மி கட்சி எம்பி கோரிக்கை

    பாராளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2021-22 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கு பின்னர் மாநிலங்களவை பிப்ரவரி மாதம் 12-ந் தேதியும், மக்களவை 13-ந் தேதியும் ஒத்திவைக்கப்பட்டன. 

    அதன்பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே, பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, ஆம் ஆத்மி கட்சி எம்பி நரைன் தாஸ் குப்தா கடிதம் எழுதி உள்ளார். 

    மாநிலங்களவையில் உள்ள எம்பிக்களில் பெரும்பாலான எம்பிக்கள் மூத்த குடிமக்கள். சமீபத்தில் மக்களவை சபாநாயகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே, சூழ்நிலையை கருத்தில் கொண்டும் பொதுநலன் கருதியும் பாராளுமன்றத்தை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என நரைன் தாஸ் எம்பி தனது கடிதத்தில் கூறி உள்ளார்.
    Next Story
    ×