search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார்
    X
    பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார்

    கர்நாடகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா? - பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பதில்

    கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுகிறதா என்பது பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பதில் அளித்துள்ளார்.
    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என்று பெற்றோர் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் ஒசக்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனாவை நாம் தான் அதிகரிக்க வைக்கிறோம். மக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். 

    பள்ளிகளில் மாணவர்கள் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுகிறார்கள். இந்த மாணவர்கள் மாநிலத்திற்கே முன்மாதிரியாக திகழ்கிறார்கள். அதனால் கர்நாடகத்தில் பள்ளிகளை மீண்டும் மூடும் திட்டம் இல்லை. வழக்கம் போல் பாதுகாப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும்.

    இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
    Next Story
    ×