search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யஷ்வந்த் சின்கா
    X
    யஷ்வந்த் சின்கா

    யஷ்வந்த் சின்கா பதிவிட்டதாக வைரலாகும் தகவல்

    முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா பதிவிட்டதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த யஷ்வந்த் சின்கா பதிவிட்டது போன்ற ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் பதிவில் பா.ஜ.க. கட்சியை கடுமையாக தாக்கும் தகவல் கவிதை வடிவில் எழுதப்பட்டு இருக்கிறது.

    வைரலாகும் ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட்டை ஆய்வு செய்ததில், அது வெரிபை செய்யப்பட்ட ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து பதிவிடப்படவில்லை என தெரிகிறது. யஷ்வந்த் சின்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட் வெரிபை செய்யப்பட்டு இருக்கும். மேலும் ஸ்கிரீன்ஷாட்டில் இருக்கும்  ட்விட்டர் முகவரியை ஆய்வு செய்ததில், அது யஷ்வந்த் சின்காவின் அக்கவுண்ட் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இதுதவிர யஷ்வந்த் சின்காவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், பா.ஜ.க. கட்சியை இகழந்து பேதும் கவிதை கொண்ட ட்விட் எதுவும் இடம்பெறவில்லை. அந்த வகையில், வைரல் ஸ்கிரீன்ஷாட் இணைய விஷமிகளில் எடிட் செய்யப்பட்டு வேண்டுமென்றே வைரலாக்கி வருவது உறுதியாகி இருக்கிறது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×