search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்துங்கள்: உத்தவ் தாக்கரே

    கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நெறிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்தவேண்டும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
    மும்பை :

    மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் நேற்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மண்டல கமிஷனர்களுடன் காணொலி காட்சி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நோய் தடுப்பு நெறிமுறைகளை அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்தவேண்டும். நோய் பாதித்தவர்களை கண்டறியும் நடைமுறைகளின் வேகத்தையும் அதிகப்படுத்துங்கள். தினமும் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி மருந்துகளை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் 134 தனியார் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளித்துள்ளதாக கூறிய அவர், அதிகரித்து வரும் வெப்பத்தை கருத்தில் கொண்டு தடுப்பூசி மையங்களில் குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே கொரோனா பரவல் காரணமாக நாந்தெட் மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
    Next Story
    ×