search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்
    X
    திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன்

    அதெல்லாம் சரி... உங்கள் முதல்வர் வேட்பாளர் யார்? -மோடிக்கு திரிணாமுல் காங்கிரஸ் சவால்

    பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா வாக்குறுதி அளித்தாலும் நிறைவேற்றுவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் பதிலடி கொடுத்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்கத்தில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வர் பதவியில் இருக்கும் மம்தா பானர்ஜியை, இந்த முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு பாஜக தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி இன்று தனது பிரசாரத்தின்போது மம்தா பானர்ஜியை தாக்கி பேசினார். திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுவதாகவும், மம்தா பானர்ஜி வெளியேற உள்ளதாகவும் அவர் பேசினார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், பிரதமருக்கு சவால் விட்டிருக்கிறார். டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-

    நீங்கள் அழிவுகரமான கட்சி. நான் பிரதமரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். உங்கள் முதலமைச்சர் வேட்பாளர் யார்? எங்களிடம் மம்தா பானர்ஜி இருக்கிறார். உங்களால் ஏன் முதல்வர் வேட்பாளர் பெயரை அறிவிக்க முடியவில்லை? ஏனெனில் நீங்கள் முதல்வர் வேட்பாளர் ‘ஏ’ என கூறினால், பி மற்றும் சி கிளர்ச்சி செய்யும். நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். உங்கள் முதலமைச்சர் வேட்பாளரை சொல்லுங்கள்.

    எங்கள் முதலமைச்சர் வாக்குறுதிகள் அளிக்கிறார், செயல்படுத்துகிறார். பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷா வாக்குறுதியளித்தாலும் நிறைவேற்றுவதில்லை. 15 லட்சம் எங்கே? பணமதிப்புநீக்க நடவடிக்கை ஏன்? இந்தத் தேர்தல் அரசியலமைப்பிற்கான போராட்டம். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×