search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி
    X
    முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

    ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அபார வெற்றி - அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை

    ஆந்திராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.
    அமராவதி:

    ஆந்திராவில் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.

    இதில் எழூரு மாநகராட்சிக்கு பதிவான வாக்குகளை தவிர மற்ற 11 மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

    இதில் தொடக்கத்தில் இருந்தே அனைத்து மாநகராட்சிகளிலும் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் இருந்தது. இதே நிலை கடைசிவரை தொடர்ந்து அனைத்து மாநகராட்சிகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றி சாதனை படைத்தது.

    இதைப்போல மொத்தமுள்ள 75 நகராட்சிகளில் 73-ஐ அந்த கட்சி கைப்பற்றியது. மீதமுள்ள 2 நகராட்சிகளில் தெலுங்குதேசம் வெற்றி பெற்றது.

    நகர்ப்புற உள்ளாட்சியில் அபார வெற்றி பெற்றதை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை இந்த தேர்தல் வெற்றிகள் நிரூபிப்பதாக கட்சியின் எம்.எல்.ஏ.வான அம்பத்தி ராம்பாபு தெரிவித்தார்.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது. அந்த கட்சி சமீபத்தில் நடந்த கிராமப்புற உள்ளாட்சியிலும் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×