என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் - மேற்கு வங்காளத்தில் விவசாயிகள் பிரசாரம்
Byமாலை மலர்13 March 2021 8:39 PM GMT (Updated: 13 March 2021 8:39 PM GMT)
மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா:
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திவந்த விவசாயிகள், மேற்கு வங்காளம் சென்று அங்குள்ள பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
எந்தப் பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் தொடங்கிய விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது. இவர்கள், சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்வோம் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
அதன்படி ஒரு குழு மேற்கு வங்காளத்திற்கு விரைந்து தங்களின் பரப்புரையைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மேற்கு வங்காள மாநிலத்தில் விவசாயிகள் அதிகம் இருக்கக்கூடிய கிராமப்புறங்களில் விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பா. ஜ.க. கட்சிக்கு வாக்களிக்காதீர்கள் என்ற முழக்கத்துடன் பேரணி நடத்தி வருகின்றனர்.
கிரித்தி கிசான் யூனியன், யோகேந்திர யாதவின் ஸ்வராஜ் இந்தியா, சன் யுக்த் கிசான் மோர்ச்சா உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்கங்கள் தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளன. மகாபஞ்சாயத்து என்று அழைக்கப்படும் விவசாயிகள் அடங்கிய கிராமப்புற பஞ்சாயத்துக்களில் இவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவை தவிர வரும் மார்ச் 26 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் இந்த முழு அடைப்பை செயல்படுத்தவும் விவசாய சங்கங்கள் வியூகம் வகுத்துள்ளன.
Next Story
×