search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள் (கோப்பு படம்)
    X
    நீட் தேர்வு எழுத வந்த மாணவிகள் (கோப்பு படம்)

    மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு தேதி அறிவிப்பு

    நாடு முழுவதும் 11 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதிலும் உள்ள அரசு, தனியார் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்ளுக்கு இந்த நீட் தேர்வின் மதிப்பெண் மூலம் சேர்க்கை நடைபெறும். 

    அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட்  நுழைவுத் தேர்வு (இளங்கலை) ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 11 மொழிகளில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.

    நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கியதும், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களுடன் கூடிய விரிவான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தேர்வு முகமை கூறியுள்ளது.
    Next Story
    ×