search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்பு பணிகளை பார்வையிடும் மம்தா பானர்ஜி
    X
    மீட்பு பணிகளை பார்வையிடும் மம்தா பானர்ஜி

    கொல்கத்தா தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலி - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா

    கொல்கத்தா நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள பல அடுக்கு கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் 8 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமுடன் ஈடுபட்டனர். அந்த கட்டிடத்தின் 13-வது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தீ மற்றும் அவசரகால சேவையை சேர்ந்த சுஜித் போஸ் கூறுகையில், குறைந்த அளவே இடவசதி உள்ளதால் ஏணி வைப்பதற்கு கூட சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    இந்த தீ விபத்தில் தீயணைப்பு படை வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    தீ விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி அங்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.  தீ விபத்தில் சிக்கி  உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.
    Next Story
    ×