search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தினேஷ் திரிவேதிக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய பாஜக தலைவர்
    X
    தினேஷ் திரிவேதிக்கு உறுப்பினர் அட்டை வழங்கிய பாஜக தலைவர்

    திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்

    மேற்கு வங்க மாநிலத்தில், திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தல் கடும் சவால் நிறைந்ததாக உள்ளது. மம்தா பானர்ஜியின் தீவிர விசுவாசியாக இருந்த சுவெந்து அதிகாரி உள்பட சில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் விலகி விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

    அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் எம்.பி தினேஷ் திரிவேதி (வயது 70), இன்று பா.ஜ.க-வில் இணைந்தார். தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தினேஷ் திரிவேதி கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவி மற்றும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகிய நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

    இதேபோல் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் நடிகருமான மிதுன் சக்கரவர்த்தியும் பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் நாளை நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அவர் பாஜகவில் இணையலாம் என தெரிகிறது.

    மேலும், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சத்காச்சியா தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ சோனாலி குகாவும் பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×