search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரூக் அப்துல்லா
    X
    பரூக் அப்துல்லா

    சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் நீதிமன்றத்தில் பரூக் அப்துல்லா வழக்கு

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான ரூ.12 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லாவுக்கு சொந்தமான சுமார் ரூ.12 கோடி மதிப்புள்ள சொத்துகளை கடந்த டிசம்பர் மாதம் அமலாக்கத்துறை முடக்கியது. அந்த சொத்து, காஷ்மீர் கிரிக்கெட் சங்கம் தொடர்பான ஊழலில் சம்பாதித்த சொத்துகள் என்று கூறி, இந்த நடவடிக்கையை எடுத்தது.

    இந்நிலையில், சொத்து முடக்கத்தை எதிர்த்து காஷ்மீர் ஐகோர்ட்டில் பரூக் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்தத் தகவலை தெரிவித்த தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஹஸ்னைன் மசூடி, ‘‘அந்த சொத்துகள், பரம்பரை சொத்துகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழல் புகார் எழுவதற்கு முன்பே வாங்கப்பட்ட சொத்துகள் ஆகும்’’ என கூறினார்.
    Next Story
    ×